திருப்பூரில் தகாத உறவுக்காக கணவன் கொலை : மனைவிக்கும், தகாத உறவு காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர் : தகாத உறவுக்காக கணவனை கொலை செய்த மனைவிக்கும், தகாத உறவு காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் : தகாத உறவுக்காக கணவனை கொலை செய்த மனைவிக்கும், தகாத உறவு காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மரியபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கேசவன். இவருடைய மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு நிக்கேஷ் (6) மற்றும் நிக்வின் (5) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி இரவு, கீர்த்திகா அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த கேசவனை தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர் கொலை செய்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, உயிரிழந்த கேசவனின் மனைவி கீர்த்திகாவின் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போனில் இருந்த குறுந்தகவல்களை ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த அன்று இரவே, உனது கணவர் கேசவனை கொலை செய்துவிட்டதாக மதியழகன் என்பவர் கீர்த்தீகாவிற்கு குறுந்தகவல் அனுப்பியிருந்ததை உறுதி செய்தனர்.

பின்னர், கீர்த்திகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மதியழகன் என்பவரை பிடித்து விசாரணைமேற்கொண்டதில், கீர்த்தீகா மற்றும் மதியழகனுக்கும் பல மாதங்களாக தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்களின் உறவுக்கு கேசவன் இடையூறாக இருந்ததாலும், கீர்த்திகா கொலை செய்ய சொன்னதால் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். 

இந்த வழக்கு விசாரணையானது, இரண்டாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜியாவுதின் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, கேசவனை கொலை செய்த மதியழகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதேபோல, கொலை செய்ய தூண்டிய கீர்த்தீகாவிற்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...