நீலகிரி : குன்னூரில் அணையில் நீர் இருப்பு இருந்தும், முறையாக குடிநீர் விநியோகம் செய்யாமல் செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட குமரன்நகர், பரசுராம் சாலை, வி.பி. தெரு, வேளாங்கண்ணி நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். தற்போது, பள்ளிகளில் தேர்வு துவங்கியுள்ள நிலையில், இரவு நேரத்திலும் சிறிய ஊற்றுகளில் இருந்து தண்ணீர் எடுக்க செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது.
ரேலியா அணையில் தண்ணீர் இருப்பு இருந்தும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தனியாரிடம் விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடையில்லாமல் தண்ணீர் வழங்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது :- ரேலியா அணையில் தற்போது 43 அடியில், 38 அடி மட்டுமே தண்ணீர் உள்ளதால், கோடைகாலத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் சிக்கனமாக செலவிடப்படுகிறது. இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்யும் மழை, தொடர்ந்து பெய்யும் பட்சத்தில், தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும், என்றார்.