கோவை : கோவையில் நடைபெற்ற பா.ஜ.க., அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க., தொண்டர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் இருசக்கர வாகனப் பேரணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் பகுதியில் இருந்து, துடியலூர் வரை மாவட்ட பா.ஜ.க. சார்பில் வாகனப் பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டனர். ஆனால், ஒருவர் கூட சாலை விதிமுறைகளை மதிக்காமல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கினர். அதோடு, ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனங்களை ஓட்டினர். போலீசாரும் இதனை கண்டுகொள்ளவில்லை.
“கட்சியின் தலைமை பண்பை இது வெளிக்காட்டுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்கின்றனர் பொதுமக்கள்.