கோடநாடு கொலை குற்றவாளிகள் சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளிகள் சயான், மனோஜ் ஆகியோருக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளிகள் சயான், மனோஜ் ஆகியோருக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது . கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வடமலை இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தார். உடனே குற்றவாளிகள் தலைமறைவாகினர். இதற்கிடையே சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் வக்கீல் இருவரையும் கைது செய்ய தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, அவர்கள் இருவரையும் 4 தினங்களுக்கு கைது செய்ய தடை விதித்தார். பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதி வடமலை கூறினார்.



இந்த நிலையில், கோத்தகிரி போலீசார் நேற்று சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை திருச்சூரில் கைது செய்து, இரவு 10 மணிக்கு உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சயான் தரப்பு வழக்கறிஞர் செந்தில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதி தீர்ப்பு வரும் வரை இவர்களை கைது செய்ய மாட்டோம் என்று அரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ள நிலையில், தற்போது குற்றவாளிகளை கைது செய்தது தவறு என்று வாதிட்டார். இதற்கு அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதி வடமலை, இருவரையும் நேற்று ஒருநாள் இரவு மட்டும் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை போலீசார் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, இருவரையும் மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...