Exclusive: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் : சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் 600 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் அடி ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும், சர்வதேச விமானங்களும் அதிக அளவில் இயக்க 12 ஆயிரம் அடி ஓடுபாதை தேவைப்படுகிறது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய கோவை மாநகரின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை அடுத்து, 2010 ஆம் ஆண்டு முதல் விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலங்களை கையகப்படுத்த பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் ஒரு பகுதியாக, 624 ஏக்கர் நிலங்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னியம்பாளையம், இருகூர், நிலம்பூர், உப்பிலியபாளையம், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டன. இதில், 461 ஏக்கர் பட்டா நிலங்கள், 28 ஏக்கர் பயன்படுத்தப்படாத புறம்போக்கு நிலங்கள், முப்படைகளுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.

இதனிடையே, விவசாய நிலங்களுக்கு ரூ. 900 ஒரு சதுர அடிக்கு எனவும், வீடுகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு ரூ.1,500 ஒரு சதுர அடிக்கு என நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, நிலங்கள் 24 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற் போல் பகுதி வாரியாக இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று 7-வது பிரிவு உப்பிலிபாளையம், பாரதி நகர் மக்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, விமான நிலைய விரிவாக்க பணிகள்) கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மக்கள் தற்போது உள்ள சந்தை மதிப்பின்படி, ஒரு சதுர அடிக்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எடுக்கப்படும் நிலங்களுக்கு இழப்பாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே மாற்று நிலங்கள் வழங்கப்பட வேண்டும். இழப்பீடுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் அதிகாரிகள் பேசியதையடுத்து, சமரசம் அடைந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளில் இருந்து பின் வாங்க போவது இல்லை என தெரிவித்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...