கோவை : ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வருவதையொட்டி, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவானது வரும் 4-ம் தேதி மாலை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவானது மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 3.40 மணிக்கு கோவை வருகிறார். அவர் பந்தயசாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதேபோல, மறுநாள் காலை கார் மூலம் சூலூர் விமானப் படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்குகிறார். பின்னர், மீண்டும் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்து மாலை மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்குள்ள தியான லிங்கம், லிங்க பைரவி தேவி, சூர்ய குண்டம், ஆதியோகி சிலை ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.
இரவு கோவை திரும்பி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர், செவ்வாய்கிழமை காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் கோவை வருவதையொட்டி, மாவட்டத்தில் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் என மொத்தம் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை, சூலூர் விமானப்படை தளம், குடியரசு தலைவர் கார் செல்லும் வழித்தடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. குடியரசு தலைவர் பயணிப்பதற்காக குண்டு துளைக்காத கார் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.