திருப்பூர் : பின்னலாடை துறையை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர் : பின்னலாடை துறையை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர், லூதியானா மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் பிரபலமான பின்னலாடை தொழில்துறையை மேம்படுத்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி, பல்வேறு விரிவான திட்டங்களை வீடியோ கான்பிரசின்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன். 2022-ம் ஆண்டில் ரூ. 1,00,000 கோடி இலக்கை அடைய முடியும். மேலும், இந்த திட்டங்கள் திருப்பூரில் உள்ள சிறு, குறு பின்னலாடை தொழில் நிறுவனங்கள் நிதியளவிலும், பயன்பாட்டு அளவிலும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அதோடு, திருப்பூரில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது, என்றார். மேலும், வட்டியில்லா வங்கிக்கடன் திட்டமான யார்ன் வங்கி திட்டத்தில் ரூ. 200 கோடி வரையிலான முதலீட்டுக் கடன் வசதிக்கும், சோலார் சக்தி திட்டத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.