திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறினர்.

விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது :- கடந்த 2016-ம் ஆண்டு பிப்., மாதம் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 14 பேர் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இத்தகைய அரசு திட்டத்தை நிறைவேற்றிய நிலையில், திட்டத்திற்காக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து, நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இது குறித்து, வழக்கு தொடர்பான விவரங்களை திருப்பூர் ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் அளிக்கும்படி தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஒரு பிரத்யேக சந்திப்பை ஏற்பாடு செய்துகொள்ளலாம் என ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்தார், என்றார்.

மற்றொரு விவசாயி ராஜாமணி கூறியதாவது :- திருப்பூர், காங்கயத்தை அடுத்த முத்தூர் அருகே வட்டாரக்காடு காலனி பகுதியில் கொடுமுடி பிரதான ரோட்டின் அருகில் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலை அமைந்துள்ளது. இதன், அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த கல் உடைக்கும் ஆலையில் இருந்து வெளியேறும் கற் துகள்கள், காற்றில் பறக்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் ஏற்படும் சத்தத்தின் காரணமாக மாணவர்கள் படிக்க முடிவதில்லை, தூக்கமும் கெடுகிறது. இதனால், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆலையை தடை செய்ய வேண்டும், என வலியுறுத்தினார்.
மற்றொரு விவசாயி மவுனகுருசாமி பேசியதாவது:-கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி பகுதியில் மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. உடுமலை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினை, பெரிய அளவில் உள்ளது. கோடை தொடங்கும் முன்னர் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.