நீலகிரி : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சரிபார்த்தார்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதில், நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை, கடந்த பிப்ரவரி 9-ம் தேதியன்று பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உதகை தமிழகம் ஆய்வு மாளிகையில் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், நேற்று புதிதாக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சரிபார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலுக்காக 684 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,699 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், 912 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து கட்சியினர் முன்பு சரிபார்க்கப்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.