கோவை : புதியவர் நகர் பகுதியில் குப்பைக் கூளங்களுக்கு மர்ம நபர்கள் வைத்த தீயினை, குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாதவாறு தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

ராமகிருஷ்ணா கல்லூரி அருகே உள்ள புதியவர் நகர் பகுதியின் குப்பைகள் ஒரு இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் குப்பை மேட்டில் சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், பிளாஸ்டிக் உள்பட பல்வேறு கழிவுகளை உள்ளடக்கிய குப்பை மேடு கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர், மெதுவாக அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது.

இதையடுத்து, இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விரைந்து, வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.