ரூ. 2,200 கோடி மதிப்பில் 12,500 கிராமங்களில் இணையதள வசதி : தமிழக தலைமை செயலர்

கோவை : தமிழகத்தில் உள்ள 12, 524 கிராமங்களில் ரூ. 2,200 கோடி செலவில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமை செயலர் சந்தோஷ் பாபு தெரிவித்தார்.

கோவை : தமிழகத்தில் உள்ள 12, 524 கிராமங்களில் ரூ. 2,200 கோடி செலவில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமை செயலர் சந்தோஷ் பாபு தெரிவித்தார்.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில், சி.ஐ.ஐ., சார்பில் 4-வது தொழில்புரட்சி, உங்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..? என்ற கருத்தை மையமாகக் கொண்டு, 18வது கனெக்ட் கோவை சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழக தலைமை செயலர் சந்தோஷ் பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.டி., துறையில் தமிழக அரசின் நடவடிக்கைகள், தொழில் தொடங்கும் கொள்கைகள் குறித்த நேர்மறையான கருத்துக்களை அவர் கூறினார். மேலும், தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமங்களை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். 



“மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் ரூ. 2,200 கோடி செலவில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இணைக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் 1 ஜி.பி.பி.எஸ்., இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டம், தரை வழியாகவும், செயற்கை கோபுரங்கள் வழியாகவும் செயல்படுத்தப்படும்.

அனைத்து தகவல்களும் ஒரே கூரையின் கீழ் இடம்பெறும் வகையில் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கேற்ற வகையில் மாஸ்டர் டேட்டா பேஸ் உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. ஒரு முறை இந்த மாஸ்டர் டேட்டா பேஸ் வசதியானது, பொதுமக்களுக்கு பொது சேவை மையமாக திகழும். இந்த மையங்கள் நாள்தோறும் ஆட்சியில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. 



புதிய தொழில்நுட்பங்களில் சைபர் பாதுகாப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்காக, தமிழக அரசிற்கான சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பிற்காக ரூ. 23 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை நிர்வகிக்க கணினி அவசர விரைவு படை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் படை தமிழக அரசின் அனைத்து டிஜிட்டல் தகவல்களையும் பாதுகாக்கும். இந்தப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் தமிழக தலைமை செயலர் சந்தோஷ் பாபு.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...