கோவை : சோமனூர் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கனகராஜ் நேற்று திறந்து வைத்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் மற்றும் உரமூட்டைகள் உள்ளிட்டவை துணை விரிவாக்க மையத்திலிருந்து வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சோமனூரில் இயங்கி வந்த விரிவாக்க மையத்தின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, பொலிவான புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் சோமனூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில அரசு திட்டம்) சித்ராதேவி, சூலூர் வட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் ஷபி அகமது, வேளாண்மை அலுவலர் சுரேஸ்குமார், சோமனூர் துணை வேளாண்மை அலுவலர் செந்தில், உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன், வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர்.