இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முன் தினம் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்ற அவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார். அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து, மத்திய அரசின் முயற்சியால், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசினார்.
அதில், அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார். அதன்படி, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகளின் துணையுடன் அவர், இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தார். எல்லைக்குள் வந்த அபிநந்தனை முப்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அங்கு அபிநந்தனை வரவேற்றனர்.
எப்போதும் வாகா கதவுகள் திறக்கும் போது அதை காண மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை பாதுகாப்பு கருதி, நிகழ்வு நடக்கும் பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வெளியில் மக்கள் பெரிய அளவில் கரகோஷம் எழுப்பி அபிநந்தனை வரவேற்றார்கள். கரகோஷங்கள் விண்ணை பிளக்க அபிநந்தன் இந்தியாவிற்கு அடியெடுத்து வைத்தார்