4-வது தொழில்புரட்சியை மையமாகக் கொண்ட ‘18-வது கனெக்ட் கோவை’ மாநாடு

கோவை : சி.ஐ.ஐ. சார்பில் 4-வது தொழில்புரட்சியை மையமாகக் கொண்ட ‘18-வது கனெக்ட் கோவை’ மாநாடு இன்று நடைபெற்றது.


கோவை : சி.ஐ.ஐ. சார்பில் 4-வது தொழில்புரட்சியை மையமாகக் கொண்ட ‘18-வது கனெக்ட் கோவை’ மாநாடு இன்று நடைபெற்றது.



கோவை - அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில், சி.ஐ.ஐ., சார்பில் 4-வது தொழில்புரட்சி, உங்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..? என்ற கருத்தை மையமாகக் கொண்டு, இந்த மாநாடு நடைபெற்றது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் காரணிகள் தொழிற்துறையில் ஏற்படுத்தப்படும் தாக்கம் என்பது பற்றியும் அலசப்பட்டது. மெஷின்களின் பயன்பாட்டுக் காலம், தயாரிப்பு, டிஜிட்டல் டுவின்ஸ், யுக்திகள், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆட்டோமேஷன் & டிஜிட்டல் மாற்றம் போன்றவற்றை குறித்து பல்வேறு செசன்களில் விவரிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்ச்சியில் சாஃப்ட்வேர் பார்க்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த இயக்குநர் தேவேஷ் தியாகி பேசுகையில், “டிஜிட்டல் புரட்சி வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. ஐ.டி., துறையானது, நகரில் பெரும்பாலான வேலைவாய்ப்பை அளிக்கிறது, என்றார்.



இந்த நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ., கோவை மண்டலத்தின் தலைவர் ஆர். வரதராஜன், இணை ஆலோசகர் செந்தில் ராமலிங்கம், டாடா கன்சல்டன்சி சர்வீசின் சென்னை பிராந்திய தலைவர் சுரேஷ் ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...