கோவில் திருவிழா தகராறில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யக் கோரி பெண்கள் சாலை மறியல் : போலீசாருக்கும், பெண்களுக்குமிடையே தள்ளுமுள்ளு

திருப்பூர் : திருப்பூரில் கோவில் திருவிழாவின் போது, தகராறில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் கோவில் திருவிழாவின் போது, தகராறில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.



திருப்பூர் பத்மாவதிபுரம் மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 15-ம் தேதி துவங்கியது. 19-ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறின் காரணமாக, 20-ம் தேதி ஆளும்கட்சி பிரமுகர்கள், பெரியார் காலனியை சேர்ந்த தங்கராஜ் உள்ளிட்ட இருவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பத்மாவதிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது, போலீசார் பெண்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பெண்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அவிநாசி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...