திருப்பூர் : திருப்பூரில் இன்று தொடங்கிய 3 நாள் நடக்கும் பின்னலாடை இயந்திர கண்காட்சியில், 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் திருமுருகன்பூண்டி ரிங்ரோடு பகுதியில் உள்ள ஹைடெக் திருப்பூர் கண்காட்சி வளாகத்தில் நிட் டெக் 2019-ம் ஆண்டு பின்னலாடை இயந்திர கண்காட்சி துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், 2 லட்சத்து 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 400 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கா, இத்தாலி, எத்தியேப்பியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 23 நாடுகளில் இருந்தும் இந்தியாவின் முன்னணி பின்னலாடை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது.

இந்த கண்காட்சியைக் காண 2,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வர்த்தகர்களும், திருப்பூர், சூரத், லூதியானா, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தியாளர்களும், பார்வையாளர்களாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் இக்கண்காட்சி வாயிலாக நடைபெறும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இக்கண்காட்சியில் அமெரிக்காவில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை நிட்டிங் மெஷின் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 4 இயந்திரங்கள் செய்யும் பணியை இந்த இயந்திரம் தனித்து விரைவாக ஒரே நாளில் 1,000 கிலோ பின்னலாடை துணியை உற்பத்தி செய்யும் திறன் படைத்ததாக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பூரை சேர்ந்த நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வாஷிங் இயந்திரம் குறைந்த நீரினை கொண்டு இயங்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நீர் மேலாண்மைக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே போல, கோவையை சேர்ந்த நிறுவனத்தின் நிறமிக் சேர்ப்பு இயந்திரமும், தானியங்கி சுமை தூக்கும் இயந்திரமும் பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.