மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு : விலங்குகள் காட்டை விட்டுவெளியேறும் என வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் இருக்கும் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் காட்டை விட்டு வெளியில் வரலாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் இருக்கும் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் காட்டை விட்டு வெளியில் வரலாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாண்டு வனத்தினுள் பெய்ய வேண்டிய மழையின் அளவு 50 சதவிகிதம் வரை குறைந்து விட்டதால், காடுகள் அதன் பசுமையினை இழந்து காணப்படுகிறது. பருவ மழை பொய்த்துப்போன நிலையில், வெயிலின் தாக்கமும் முன்கூட்டியே அதிகரித்து விட்டதால், வனத்தினுள் இருந்த இயற்கையான நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதனால், செடி கொடிகள் சிறு, சிறு மரங்கள் காய்ந்து கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரக பகுதி காடுகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால், யானைகள், மான்கள், காட்டெருதுகள் என அனைத்து வன உயிரினங்களும் தாகம் தீர்க்க நீராதாரங்களை தேடி அலைகின்றன. சிறு சிறு விலங்கினங்கள் சிறிதளவு தண்ணீர் கிடைத்தாலே சமாளித்துவிடும் நிலையில், உயிர் வாழ ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் நீர் தேவைப்படும் யானைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. 



காய்ந்து விட்ட வனக்குட்டைகளில் ஒரு சிலவற்றில் மட்டும் ஓரளவே தேங்கி நிற்கும் தண்ணீரை தேடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், கூட்டம் கூட்டமாய் வந்தபடி உள்ளன. காடுகளுக்குள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் குறைந்தளவு தண்ணீரும் வற்றி விட்டால், யானை போன்ற பெரிய உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே, காடுகளுக்குள் நிலவும் நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் செயற்கையாய் தண்ணீர் தொட்டிகளை கட்டி, அதில் நீர் நிரப்பும் திட்டத்தில் இறங்கியுள்ளனர். 

மேலும், இதுபோன்ற வறட்சி காலத்தில் வனத்தின் அருகில் கால்நடை மேய்ச்சலுக்காக செல்லக் கூடாது, எந்த காரணத்தை கொண்டும் வனத்தினுள் நுழையக்கூடாது. யானைகள் காட்டை விட்டு வெளியில் வந்து கிராமங்களுக்குள் நுழைய முற்பட்டால், அவற்றை தாங்களே விரட்ட முயற்சிக்காமல், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். வனத்தினுள் நிலவும் வறட்சி காரணமாக போதிய உணவோ, நீரோ கிடைக்காமல் வெளியில் வரும் யானைகளை பொதுமக்களே விரட்ட முயற்சிப்பது ஆபத்தானது, என வனத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...