கோவை மாவட்டத்திற்கு கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் நியமனம்

கோவை : கோவை மாவட்டத்திற்கு கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக ஏ. உதயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்திற்கு கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக ஏ. உதயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சில தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகளை அரசு வழங்கியது. அதன்படி, தமிழக பல்லுயிர் வாரியத்தின் உறுப்பினரும், முன்னாள் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலருமான ஏ. உதயன், கோவை மாவட்ட கூடுதல் தலைமை வனப் பாதுகாவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, முன்னாள் தலைமை வனப் பாதுகாவலராக இருந்த தீபக் ஶ்ரீவத்ஸவா, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சிறப்பு செயலாளராகவும் (வனம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 மே மாதம் முதல் கோவை மாவட்ட வனப் பாதுகாவலராக பொறுப்பேற்ற ஶ்ரீவத்ஸவா, முன்னதாக, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது தலைமையில் கோவை மண்டலத்தில் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய யானைகளை இடமாற்றம் செய்யும் முக்கிய 2 ஆபரேஷன்கள் நடைபெற்றன. இவரது விடுமாறு காலத்தில், வடக்கு பிராந்தியத்தின் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கே.கே. கவுசல் பணியாற்றுவார்.

இந்தப் புதிய நியமனங்கள் மூலம், தமிழ்நாடு வன அகாடமி கூடுதல் தலைமை வனப் பாதுகாவர் என்ற புதிய பொறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மட்டுமில்லாது, வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்ட வனத்துறையின் தலைமை வனப்பதுகாவலர்கள் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில், பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் பெற்ற அதிகாரிகள் விரைவில் பொறுப்பேற்பார்கள் எனத் தெரிகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...