கோவை: கோவையில் 10 தாசில்தார்கள் இடமாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் வரவுள்ளதை அடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கோவை மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சுந்தர்ராமன் கூறுகையில், "தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். திடீரென இடமாற்றம் செய்யப்பட்டால் மாற்றப்பட்ட இடத்தின் அனுபவம் இல்லாமல் எவ்வாறு தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியும். உடனடியாக இந்த இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டல் அடுத்த கட்ட போராட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.
மாற்றபட்ட தாசில்தார்களின் விவரம் :
பேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மதுக்கரை தாசில்தார் பழனிசாமி நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். சூலூர் தாசில்தார் ஜெயராஜ் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். கோவை வடக்கு தாசில்தார் விஜயக்குமார் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அன்னூர் தாசில்தார் வசந்தாமணி திருப்பூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மேட்டுப்பாளையம் தாசில்தார் புனிதா திருப்பூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பொள்ளாச்சி தாசில்தார் ரத்தினம் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். வால்பாறை தாசில்தார் வெங்கடாசலம் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். கிணத்துக்கடவு தாசில்தார் சங்கீதா திருப்பூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். உதவி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி சகுந்தலாமணி திருப்பூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.