கோவையில் அதிவேகமாக சென்ற கார் சீறிப்பாய்ந்து எதிர்திசையில் வந்த கார் மீது மோதி விபத்து : அதிர்ச்சியளிக்கும் சி.சி.டி.வி., காட்சிகள்

கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, பாய்ந்து சென்று எதிர்திசையில் வந்த மற்றொரு காரில் மோதும் பரபரப்பு சி.சி.டி.வி., காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, பாய்ந்து சென்று எதிர்திசையில் வந்த மற்றொரு காரில் மோதும் பரபரப்பு சி.சி.டி.வி., காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.



கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர், நேற்று மதியம் அவரது சொகுசு காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் காரை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது. சூலூர் பிரிவு அருகே முதலிபாளையம் சந்திப்பில் கார் வந்த போது, நிஷாந்தின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி பறந்து சென்ற கார், எதிர்திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அந்த காரை கோவையைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் நிஷாந்தின் கார் முற்றிலும் சேதமடைந்தது. விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்ட பொதுமக்கள், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதியதோடு, நிஷாந்தின் கார் கவிழ்ந்து சுற்றும் பரபரப்பான, சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...