கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணிக்காக கரும்புக்கடை பகுதியில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86 வது வார்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரிகள் (Town planning officers ) முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இது குறித்து கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "42 கட்டிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன. இதில் சில கட்டிடங்களின் முன்பகுதிகள் அகற்றப்பட்டன. அதே போல் 10 வீடுகள் முழுமையாக அகற்றப்பட்டன. அவர்களுக்கு ஏற்கனவே குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் முன் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடனே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன," என்றார்.

பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு ஜெ.சி.பி. வாகனங்கள், ஒரு டிராக்டர் பயண்படுத்தப்பட்டன.