கோவை : சிங்காநல்லூர் அருகே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய தங்கையை வெட்டில் கொலை செய்த முதியவரை போலீசார்கைது செய்தனர்.

சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த முதியவர் வேலுச்சாமி (85). இவரது தங்கை பேச்சியம்மாள் (70). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ராஜ வீதியில் இருக்கும் தங்களது வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், பேச்சியம்மாள் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் வலுக்கி விழுந்த நிலையில், மயக்கத்தில் இருந்தார். இதைக் கண்ட அவரின் மகள் கலாமனி பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தினர் துணையுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனையில் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் அர்ஜூன் குமார், போஸ், காசி பாண்டியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மூதாட்டி மரணம் தொடர்பாக விசாரித்தனஎ. அதில், மூதாட்டியை அவரது அண்ணன் வேலுச்சாமி கொலை செய்ததை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து, வேலுச்சாமியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீட்டை விட்டு வெளியேற சொல்லியதால் ஆத்திரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.