கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி ஆய்வு செய்தார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக பெங்களூருவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பந்தய சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி முன்னிலையில் ஆய்வுக்கு பின்னர் அறைக்குள் வைத்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.