கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை பழமான மங்குஸ்தான் பழங்களின் இரண்டாம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை பழமான மங்குஸ்தான் பழங்களின் இரண்டாம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

நீலகிரி மலையடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை கடந்த 1900 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கபட்டதாகும். சுமார், இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பழ பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷின நிலை நிலவுவதால், நாட்டில் மிக சில இடங்களில் மட்டுமே விளையக்கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், சிங்கபூர் பலா, பச்சை ஆப்பிள் உள்ளிட்ட பல அரிய வகை மருத்துவ குணம் மிக்க பழ வகைகள் விளைகின்றன. தற்போது, பழங்களின் அரசி என போற்றப்படும் மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியுள்ளதால், இதன் மரங்களில் ஏராளமான பழங்கள் காய்த்து பழுக்கத் துவங்கியுள்ளன.
இதன்மேல், தோல் பகுதி சற்று தடிமனாகவும், இதனை உடைத்தால் நான்கு அல்லது ஐந்து மிக மென்மையான வெண்மை நிற சுளைகள் காணப்படும். இப்பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியினையும், உடனடி குளுக்கோஸ் சக்தியினையும் வழங்கும் என்பதோடு, குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சுவை மிகுந்த இப்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.