தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில், 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், தேர்வில் எந்தவித முறைகேடு ஏற்படாமல் தடுக்கவும் 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 941 தேர்வு மையங்கள் அமைக்கப்படுள்ளது. பெருவாரியான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது இரண்டு காவல்துறையினராவது பாதுகாப்பு பணிகளில் நியமிக்கப்படுவர்.
இந்த ஆண்டு பொதுதேர்வானது, மாணவர்களின் அழுத்ததைக் குறைக்கும் வகையில், 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும், மொழித்தேர்வு பாடங்களில் 2-ம் தாள் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.