கோவையைச் சேர்ந்த விலங்குகள் நல பெண் ஆர்வலருக்கு மத்திய அரசின் உயரிய விருது

கோவை : கோவையை சேர்ந்த விலங்குகள் நல பெண் ஆர்வலர் மினி வாசுதேவனுக்கு, மத்திய அரசின் உயரிய விருதான நாரி சக்தி புரஷ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையை சேர்ந்த விலங்குகள் நல பெண் ஆர்வலர் மினி வாசுதேவனுக்கு, மத்திய அரசின் உயரிய விருதான நாரி சக்தி புரஷ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



கோவையில் மனிதநேய விலங்குகள் அமைப்பை நடத்தி வருபவர் மினி வாசுதேவன். இவர் கடந்த 13 ஆண்டுகளாக நாய், பூனை, குதிரை மற்றும் கழுதைகளுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.



இவரது இந்த செயலை பாராட்டி விலங்குகள் நல பெண் ஆர்வலர் மினி வாசுதேவனுக்கு, மத்திய அரசின் உயரிய விருதான நாரி சக்தி புரஷ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரப்பூர்வ கடிதம் கடந்த திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விருது கிடைக்க தன்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“இந்த விருதை நான் எனது தனிப்பட்ட விருதாக கருதவில்லை. இது ஒட்டுமொத்தமாக எங்களது அமைப்பிற்கு கிடைத்த பெருமையாகும். பல ஆண்டுகளாக எங்களது குழுவினர் பிரம்மாண்டமான பணிகளை செய்து வருகின்றனர். இதுவே, இந்த விருது பெற காரணமாகும். இந்த விருதை பெறுவதில் பெருமையடைகிறேன். இந்த விருதை எனது குழுவினருக்கு அர்ப்பணிக்கிறேன்,” என சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகிறார் மினி வாசுதேவன்.



பொறியாளராகிய கணவர் மது கணேசனுடன் கடந்த 2004–ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கோவை வந்தார். அப்போது, தெருக்களில் ஆதரவின்றி நாய், பூனை போன்ற விலங்குகள் சுற்றி திரிவதை கண்டுள்ளார். அப்போது, அவர்களிடத்தில் இருந்த பரிவே, விலங்குகள் நல அமைப்பை மினி வாசுதேவன் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு மனிதநேய விலங்குகள் அமைப்பை அவர் தொடங்கினார். 

“நான் கோவைக்கு வந்த போது, ஆதரவில்லாமல் சுற்றித்திரிந்த நாய், பூனை போன்ற விலங்குகள் சுற்றி திரிவதை கண்டேன். கோவை மாநகரில் விலங்குகள் நல அமைப்பு ஏதும் இல்லை. ஏற்கனவே விலங்குகள் மீது அக்கறை கொண்டிருக்கும் என்னால், இதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. எனவே, விலங்குகளுக்குகென ஒரு அமைப்பு அவசியம் என்பதை உணர்ந்து, எனது கணவருடன் இணைந்து மனிதநேய விலங்குகள் அமைப்பை தொடங்கினேன்,” என்றார் மினி வாசுதேவன்.

இத்தனை ஆண்டுகளில் 50,000-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இந்த அமைப்பு மறுவாழ்வு அளித்துள்ளது. மேலும், விலங்குகளை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் விலங்குகள் நலம் பற்றிய ஆதரவு கருத்துக்கள் அதிகரித்து வருவது பற்றி வாசுதேவன் பேசியதாவது :- ஆன்லைன் மூலமாக விலங்குகளுக்காக குரல் கொடுப்பவர்கள், களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.



மூத்த சமூக ஆர்வலர் கூறுகையில் “விலங்குகள் நல அமைப்புடன் இணைந்தோ, தனியாகவோ களத்தில் இறங்கி பணியாற்றுபவர்கள், உண்மையை புரிந்து, அவர்களது பங்களிப்பை கொடுக்க வேண்டும். இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, அப்பாவி விலங்குகளுக்கு வாழ்வளிக்க வேண்டும். இளம் குழந்தைகள் இதனை கற்று, வாழ்க்கையை மாற்ற வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...