கோவை : கோவையில்பணத்தை திருடியதாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆட்டோ ரமேஷ், முத்துமாரியப்பன், மோகன் (எ) மோசஸ் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் கோவை அரசு மருத்துவ கல்லூரி எதிரில் உள்ள நடைபாதையில் தங்கி அவ்வப்போது சமையல் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி, மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் பிரேம்குமார் (எ) பிரவீன்குமார் அவ்வழியே நடந்து சென்றபோது, அவர் வைத்திருந்த 300 ரூபாய் காணவில்லை. இதனை நடைபாதையில் இருந்த மூவரும் தான் எடுத்துள்ளதாக கருதி அவர்களிடம் அதனை திருப்பி கொடுக்கும்படி கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால், மூவரும் இதனை நாங்கள் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். இதனை நம்ப மறுத்த பிரவீன், மரியாதையாக பணத்தை கொடுத்து விடுங்கள் இல்லையெனில், உங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டியபடியே அருகில் இருந்த ஸ்லாபை எடுத்து உடைத்து மோகனை தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டபட்ட பிரவீனுக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000-மும் அபராதம் விதித்து முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார்.