திட்டங்களுக்கான வெறும் அடிக்கல்லை மட்டுமே நடுவது தி.மு.க., ஆட்சி, திட்டங்களை செயல்படுத்துவது அ.தி.மு.க., ஆட்சி : முதலமைச்சர் விமர்சனம்

திருப்பூர் : தி.மு.க., ஆட்சியில் திட்டங்களுக்கான வெறும் அடிக்கல்லை மட்டுமே நாட்டுவதாகவும், ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில்தான் திட்டங்களை செயல்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : தி.மு.க., ஆட்சியில் திட்டங்களுக்கான வெறும் அடிக்கல்லை மட்டுமே நாட்டுவதாகவும், ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில்தான் திட்டங்களை செயல்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 1,063.5 கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. மேலும், ரூ. 604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ. 52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியவை ரூ. 66 கோடியில் மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ. 1,875 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.



இந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று திருப்பூர்- காங்கயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தெரியாமல் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. இது மக்கள் விரோத ஆட்சி என பேசிவருகிறார். வேண்டும் என்றே மக்களை குழப்பி வருகிறார். எத்தனையோ கனவு கண்டார். அத்தனை கனவுகளும் கானல் நீராகிவிட்டது. அம்மா இறந்தவுடன் அ.தி.மு.க. உடைந்து விடும் என கனவு கண்டார். அது நடக்கவில்லை. அதன் பிறகு ஆட்சி இன்று கலைந்து விடும், 6 மாதத்தில் கலைந்து விடும். இன்னும் ஒரு ஆண்டு மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கும் என நினைத்தார்.

ஆனால், 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-வது ஆண்டையும் தொடங்கியுள்ளோம். தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பாலம் கட்ட அடிக்கல் நாட்டி அப்படியே நிறுத்திவிட்டனர். ஆனால், அந்த பாலப்பணிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தற்போதைய அ.தி.மு.க. அரசு அனைத்து அதிகாரிகளுடன் ஒரு முறைக்கு பல முறை ஆலோசனை நடத்தி சரியான முறையில் திட்டமிட்டு ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறோம். மத்திய, மாநில அரசு இணைந்து திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம். இந்த திட்டங்கள் அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும். 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூருக்கு வருபவர்கள், இது திருப்பூரா, அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று யோசிக்க தோன்றும் அளவுக்கு திருப்பூர் மாறிவிடும். இந்த திட்டங்கள் குறித்து எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. இதற்காகத்தான் இந்த திட்டங்கள் மூலம் திருப்பூருக்கு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை எல்.இ.டி. டிவி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.



தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அ.தி.மு.க. அப்படி அல்ல. விசுவாசமாக பணியாற்றும் ஒவ்வொரு தொண்டனுக்கும் வீடு தேடி பதவி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. திருப்பூரில் 2-வது கூட்டு குடிநீர்திட்டத்தை எம்.ஜி.ஆர். அரசு நிறைவேற்றியது. 3-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இன்று 4-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா வழியில் வந்த அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இன்று நடைபெற்ற விழாவில் 10 பணிகளுக்கு 1807 கோடியே 45 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதும் நாங்கள் தான், 2 ஆண்டுகளில் பணிகளை முடித்து நாங்களே வந்து திறந்து வைப்போம். திருப்பூரில் மட்டும் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் ஊர், ஊராக சென்றாலும் சரி, தெரு, தெருவாக சென்றாலும் சரி, மக்கள் அவரை பற்றி நன்கு அறிந்து வைத்து உள்ளனர், இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...