கோதாவரி - காவிரி இணைப்பு புதிய திட்டத்தை கோவையில் அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை : அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க விழாவில், கோதாவரி - காவிரி இணைப்பு புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கோவை : அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க விழாவில், கோதாவரி - காவிரி இணைப்பு புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய முதலமைச்சர், கோதாவரி - காவிரி இணைப்பு புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார். 

மேலும், அவர் பேசியதாவது :- கோதாவரி ஆறு, வற்றாத ஆறாகும். கிட்டத்தட்ட 2,500 டி.எம்.சி.ஓ.எஃப். தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்தநிலையில், கோதாவரி - காவிரி இணைப்பு புதிய திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 200 டி.எம்.சி., தண்ணீர் காவிரிக்கு திருப்பிவிடப்படும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், தமிழக விவசாயிகள், தண்ணீர் தேவைக்காக அண்டை மாநிலங்களை எதிர்பார்த்து இருக்க தேவையில்லை.

எனது மற்றும் அவிநாசி எம்.எல்.ஏ. தனபாலின் கூட்டு முயற்சியால், கொங்கு மண்டல விவசாயிகளின் வாழ்நாள் பயனுள்ள இத்திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

கடந்த 3013-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அத்திகடவு - அவிநாசி திட்ட ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இத்திட்டம் நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2016-ம் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வெறும் 500 முதல் 700 மி.மீ. அளவு மட்டும் மழை பெய்தால், மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில், இந்த திட்டத்தினால் 24,000 ஏக்கர் பரபரப்பளவு விவசாய நிலங்கள் பயனடைய முடியும். அதோடு, 30 எம்.வி. சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், இத்திட்டத்திற்கான மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். 

அசல் திட்டத்தில் பல்வேறு பகுதிகள் விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அந்தப் பகுதி விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் இத்திட்டப் பணிகள் முடிக்கப்படும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...