இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அ.தி.மு.க.,வின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே சசிகலா ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லுபடியாகும் என்று கூறி டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.