கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம் : எம்.எல்.ஏ., தனபால்

திருப்பூர் : கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக எம்.எல்.ஏ., தனபால் தெரிவித்தார்.

திருப்பூர் : கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக எம்.எல்.ஏ., தனபால் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.



அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏ., தனபால் பேசியதாவது :-இது, 60 ஆண்டுகால போராட்டமாகும். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அவிநாசி தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார். அப்போது, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாகவும், இதனை மக்களிடம் உறுதியளிக்குமாறும் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், உறுதியளித்தபடி, திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

தற்போது, இத்திட்டம் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, இதற்கென நியமிக்கப்பட்ட குழுவிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த திட்டம் மொத்தம் ரூ.1,652 செலவில் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, ரூ.1,000 கோடியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். கொங்கு மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிஜமாக்கிக் கொடுத்துள்ளார். கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. 



மேலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக ரூ.60 கோடி செலவில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார், எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...