பிற தலைவர்களை காட்டிலும் விவசாயிகள், பொதுமக்களின் தேவைகளை நன்கு அறிந்து வைத்துள்ளவர் முதலமைச்சர் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

திருப்பூர் : விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 70 ஆண்டுகளாக கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப்.28) அவிநாசி - கோவை மெயின் ரோட்டில் உள்ள எம்.நாதம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி., வேலுமணி உள்பட பல்வேறு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- முதலமைச்சராக பதவியேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடுதான் இருந்தார். ஆனால், போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் மாநில அரசின் நிதியை ஒதுக்கி, தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை. 



பின்வாசலில் வந்து ஆட்சி செய்வதாக எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால், இங்கு யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. மேலும், முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

அதேவேளையில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...