கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது கால்வாயிலிருந்து குழாய் மூலமாக பல்வேறு குளங்கள் மற்றும் குட்டைகளில் நீரை நிரப்பும் வகையில் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் திட்டம். இந்த திட்டத்திற்காக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக போராடியுள்ளனர். தொடர் போராட்டத்தின் விளைவாக, இத்திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப்.28) அவிநாசி - கோவை மெயின் ரோட்டில் உள்ள எம்.நாதம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். தற்போது ரூ.1,532 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் சுமார் 60 ஆண்டு கனவு நிறைவேறியதை அடுத்து, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.