நீலகிரி : கோத்தகிரியில் குடியிருப்பு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டு செடிகள் மற்றும் புற்கள் கருகி காய்ந்துள்ள நிலையில், தற்சமயம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அவ்வப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுதூர் மற்றும் புதுகோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு உடனே தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் உடனே தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.