திருப்பூர் : திருப்பூர் மாநகரில் ரூ. 1,875 கோடி செலவிலான ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாநகரில் ரூ. 1,875 கோடி செலவிலான ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில், திருப்பூர் மாநகரில் ரூ. 1,875 கோடி செலவிலான ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர், ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது :- தொழில்நகரமான திருப்பூரில் ஏராளமான தொழிலதிபர்கள் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று இருப்பார்கள். இன்னும் 2 ஆண்டுகளில் திருப்பூர் மாநகரமும், வெளிநாடு போன்ற கட்டமைப்பை பெறும். பொதுமக்கள் பயன்படும் வகையில், இங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.