கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, ஒரு வாரத்தில் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.

கோவையில் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்ற குழந்தைக்கு இரத்தம் ஏற்றியதாகவும், அதில், எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக திருச்சியை சேர்ந்த குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மேலும், இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் உட்பட ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியதாவது :-குழந்தைக்கு மூன்று அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த இடத்தில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டது. எங்கெங்கு சிகிச்சை பெறப்பட்டது என விசாரிக்க உள்ளோம்.
ஒருவார காலக்கெடுவில் குழந்தையின் விவகாரம் தொடர்பாக விசாரணை முடிவுபெறும். இவ்விசாரணை குழுவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர். மேலும், நாங்கள் உண்மை கண்டறியும் குழுவாக இருந்து பணியாற்ற உள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் முழு விசாரணை மேற்கொள்ளவுள்ளோம்.
குழந்தைகள் நலன் தேசத்தில் எங்கும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களது நோக்கம். விசாரணை முடிந்த பிறகு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உள்ளோம், என்றார்.