தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணி அமைந்திருக்கின்றது : கி.வீரமணி

கோவை : தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருப்பதாக கோவை இடதுசாரிகள் மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.

கோவை : தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருப்பதாக கோவை இடதுசாரிகள் மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது :- இந்தியா மதவெறி சக்திகளிடமும், கார்ப்பரேட் முதலாளிகளிடமும் அடகு வைக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருந்தால், இப்போது வரை 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். 15 லட்சம் ரூபாயின் மதிப்பு 6,000 ரூபாயாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருக்கின்றது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி, திராவிட ஆட்சி எது என்பதை காட்டியிருக்கின்றார் ராமதாஸ்.

இது பதவிக்காக, பணத்துக்காக இருக்கும் கூட்டணியல்ல. இது கொள்கையாளர்களின் கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணியில் அவர்களே சொல்லிவிட்டார்கள்.இது கொள்கை கூட்டணி அல்ல என்று. இது வெறும் சீட்டுக்கான தேர்தல் அல்ல.

எதிர்கால சந்ததிக்கு வாழ்வா..? சாவா..? ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? இல்லையா..? என்பதற்காக தேர்தல். கொத்தடிமைகள் என்று கடுமையாக சொல்லிவிட்டார் என்று பார்க்காதீர்கள். அமித்ஷா சொல்வதை வாய்பொத்தி, கைகட்டி நின்று கேட்கின்றனர். கூட்டணிக்கு பெயர் வைக்க கூட உரிமை இல்லாத கூட்டணி கொத்தடிமை கூட்டணி இல்லாமல் வேறு என்ன..?. இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான கொந்தளிப்பு. இதை மோடிக்கு ஆதரவாக மாற்ற முயல்கின்றனர். இதனால், தேர்தலை தள்ளிப்போடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது, எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...