தமிழிசையும், எச்.ராஜாவும் இருக்கும் வரை தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது : கே.பாலகிருஷ்ணன் பேச்சு

கோவை : தமிழிசையும், எச்.ராஜாவும் இருக்கும் வரை தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது என கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழிசையும், எச்.ராஜாவும் இருக்கும் வரை தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது என கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியாவது :- தேர்தல் கூட நடக்குமோ என்று எண்ணும்படியான செய்திகள் வரும்படியாக நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 44 வீரர்கள் பலியாக யார் பொறுப்பேற்பது என எண்ணிப்பார்க்காமல் பதிலடி கொடுத்தற்கு இனிப்பு கொடுத்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். பா.ஜ.க அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்து இருந்தால், 44 வீரர்கள் உயிரிழந்து இருக்க மாட்டார்கள். மோடியின் ஆட்சி சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, இந்து மக்களுக்கும், இந்தியாவிற்கும் விரோதமான ஆட்சி. 2,000 ரூபாய் கொடுக்க வரும் போது 15 லட்சத்தை ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி வரும். இந்த நாடு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு காரணம் மோடி.

தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது. தமிழிசையும், எச்.ராஜாவும் இருக்கும் வரை வளரவே வளராது. தமிழகத்தை யாராவது வாங்க தயாராக இருந்தால், அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி விற்றுவிடுவார். 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வருகின்றது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, தமிழகத்திலும் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அன்புமணி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து என்ன போடுவேன் என்று சொன்னீர்கள். இனி அன்புமணிக்கு கையெழுத்து போட வாய்ப்பு வந்தாலும், டாஸ்மாக் கடைக்கு பக்கத்தில் பக்கோடா கடையும், மாங்கா ஊறுகா கடையும் போடத்தான் கையெழுத்திட முடியும்.

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எல்லாருக்கும் அல்வா கொடுத்து இருக்கின்றார். 21 சட்டமன்ற தொகுதியில் சில இடங்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கின்றார். 11 பேர் வழக்கு தீர்ப்பு வந்தால் நிச்சயம் ஆட்சி கவிழும் என்பதை எடப்பாடி மறந்து விட்டார். அமித்ஷா மாதிரி அண்ட புழுகன், ஆகாச புழுகனை பார்க்கவே முடியாது. மோனோ ரயில் திட்டமே இல்லாத பொழுது, அதற்கு நிதி ஓதுக்கியுள்ளதாக பச்சை பொய் புழுகுகின்றார் அமித்ஷா, எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...