இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்றுவற்காகவே உருவானது தி.மு.க கூட்டணி : கே.எஸ்.அழகிரி

கோவை: இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி, தி.மு.க., தலைமையிலான கூட்டணி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை: இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி, தி.மு.க., தலைமையிலான கூட்டணி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அரசியல் எழுச்சி மாநாட்டில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது :- இந்திய இராணுவத்திற்கு இரு குணங்கள் உண்டு. பெருந்தன்மை, வீரம். இந்திய விமான படை வீரர்களுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சிற்பியை போல கவனம் எடுத்து இந்த கொள்கை ரீதியான கூட்டணியை உருவாக்கியுள்ளார். இது பேரம் பேசும் கூட்டணி அல்ல. இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமையிலும் நம்பிக்கை கொண்டவர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்வொம். எங்கள் மதத்தில் இருந்து கொண்டே ஆர்.எஸ்.எஸ். போல இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை இந்தியர்களாக பார்க்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் 6,000 ரூபாய் கொடுப்பது மாற்று அல்ல. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழக விவசாய கடன்களை ஸ்டாலின் ரத்து செய்வார். இந்திய பொருளாதாரத்தை மோடி நாசம் செய்து இருக்கின்றார். ஜி.டி.பி குறைத்து போய் இருக்கின்றது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

விவிசாயகளின் வருவாயை இரட்டிப்பாக மாற்ற என்ன செயல் திட்டம் இருக்கின்றது மோடியிடம். இந்தியாவில் வளர்ச்சியை உருவாக்குவதுதான் இந்த கூட்டணியின் எண்ணம். சமூக நீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த மேடையில் இருக்க வேண்டும். ஆனால், வேறு ஏதோ காரணத்திற்காக பா.ம.க , பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்றது. பொதுவுடமை கட்சிகள் இருக்கும் இடத்தில் பா.ம.க. இருந்திருக்க வேண்டும். கொள்கைக்கு மாறான ஒரு கட்சி என்றால் அது பா.ம.க.. ஒரு அரசியல் கட்சி எப்படி இரண்டு பேரிடமும் பேச முடிகின்றது, எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...