கோவை : மதசார்பற்ற பாதையில் இந்திய ஜனநாயகத்தை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காவே அரசியல் எழுச்சி மாநாடு நடத்தப்படுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் கலந்து கொண்டு பேசியதாவது :- சமயசார்பற்ற பாதையில் இந்திய ஜனநாயகத்தை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிய நேரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதில் இணைந்தனர். வட்டியில்லாத பொருளாதார திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. இதை இஸ்லாமிய மக்கள் அதை ஏற்று தொண்டர்களாக இருந்தனர். அந்த உறவு இன்றும் நீடிக்கின்றது. நபிகள் நாயகம் தங்களை பின்பற்றியவர்களை தோழர் என்றுதான் அழைத்தார். சாகிபு என்றால் தோழர் என்று அர்த்தம். வரக்கூடிய நாடாமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காக்க பா.ஜ.க.வை வீழ்த்துவதை தவிர வழியில்லை.
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம் இருக்காது. இந்தியாவின் தன்மையை அந்த கட்சி சீர்குலைத்து விடும். ‘Go back’ மோடி என்பதை வாக்குகளின் மூலம் தோழமை கட்சிகள் வாக்கின் வலிமையை ஒன்று படுத்தி செயல்படுத்த வேண்டும், என்றார்.