கோவை : போர் துவங்கும் முன்னரே 15 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்து விட்டதாக இடதுசாரிகள் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில், இடதுசாரிகள் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசுகையில், "அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்ததற்கு மோடிக்கும், அமித்ஷாவிற்கும் நன்றி. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கழகங்கள் இல்லாத தமிழகம் என கடந்த காலங்களில் பா.ஜ.கவினர் பிரச்சாரம் செய்தனர். மேலும், ஊழல் கோட்டையாக மாறிவிட்டது தமிழகம் எனவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
முன்னதாக, ஆளும் கட்சியினர் மீது ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ். இப்போது, இவர்கள் ஒன்றாக சேர்ந்துள்ளனர். போர் துவங்கும் முன்னரே 15 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்து விட்டது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நாங்கள் நன்கு அறிவோம். 40 நமதே என்று அவர்கள் முழங்கினார்கள். இப்போது, இருப்பவர்கள் 15 தொகுதிகளை இப்போதே இழந்து விட்டார்கள். மேலும், 23 எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பா.ஜ.க ஆட்சியில் கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இவர்களை வீழ்த்த பணம் இல்லாவிட்டாலும், நம்மிடம் மனவலிமை, உயர்ந்த லட்சியம் இருக்கின்றது. நாடு பின்னோக்கிப் போய் கொண்டு இருக்கின்றது. சிறு தொழில்கள், விசைத்தறி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராடிய போது அவர்களை சந்திக்காத பிரதமர் , இப்போது விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கின்றார். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணியினர் வெற்றி பெறக்கூடாது. என் மூச்சுள்ளவரையில் மீண்டும், மீண்டும் பேசி இந்த கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன். ஒவ்வொரு செஞ்சட்டை தோழரும் 100 பேரை வாக்களிக்க வைக்க வேண்டும். செங்குளவி கூட்டில் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும், என்றார்.