பாகிஸ்தானில் சிக்கியுள்ள வீரர்களை ஐநா வரை சென்று மீட்க முடியும் : கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

கோவை : பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரர்களை ஐ.நா மன்றம் வரை சென்று மீட்க முடியும், அந்த வழியைப் பயன்படுத்தி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரர்களை, இந்தியா மீட்டு வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரர்களை ஐ.நா மன்றம் வரை சென்று மீட்க முடியும், அந்த வழியைப் பயன்படுத்தி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரர்களை, இந்தியா மீட்டு வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை முன்பே நடத்தியிருக்க வேண்டும். தற்போதைய தாக்குதல் காலம் தாழ்த்தி நடத்தப்பட்டுள்ளது. 



பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரர்களை மீட்க பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. ஐ.நா மன்றம் வரை சென்று பிடிபட்டவர்களை மீட்க முடியும். அதை பயன்படுத்தி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரர்களை இந்தியா மீட்டு வரும். இந்திய விமானப்படை செய்தது சாகசம். இதை ஆயிரம் முறை வரவேற்கிறேன். அதே வேளையில், பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு முன்வந்தால் அது சிறந்தது. பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு எப்போதும் தாக்குதல்களை முன்னெடுத்தது கிடையாது, இவ்வாறு அவர் பேசினார். 

தேமுதிக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, "தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது. புதிதாக வரக்கூடிய கட்சிகளை திமுக முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் வேண்டும், யார் வேட்பாளர் என்பது ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொகுதி பங்கீடு முடிந்தபின் இறுதி செய்யப்படும்," என பதிலளித்தார். 

மேலும், அவர் பேசியதாவது :- திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. அதிமுக மக்கள் விரோத கூட்டணி. வன்முறையான கூட்டணி. ஊழல் நிறைந்த கூட்டணி. சமூக நீதியிலும், பொதுவுடைமையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் திமுக தலைமையில் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். 

7 தமிழர் விடுதலை பொறுத்தவரைக் குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும். தவறு செய்தவர்களைத் தவறு செய்தவர்களாகப் பார்க்க வேண்டும். கொலை செய்தவர்களைத் தமிழர்கள் என்ற அடைமொழி கொடுப்பது சரியானது அல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். மேலும், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்குத் தமிழகத்திற்குக் கண்டிப்பாக வருகிறார், என பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...