உதகையில் மே 17ம் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 17ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கும் என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார்.

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 17ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கும் என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார். 

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க, ஆண்டுதோறும் 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

 

இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற இருப்பதால், மே மாதம் நடைபெறும் மலர்க்கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகிய இரு கண்காட்சிகள் தேதி மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



அதன் படி, உதகை தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் நடைபெறும். மேலும், மே 25, 26 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி நடத்தப்படும். ரோஜா, காய்கறி போன்ற கண்காட்சி தேதிகள் தேர்தல் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும், என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...