இந்திய விமானப்படை விமானியை காணவில்லை : ஒப்புக்கொண்டது இந்திய அரசு

இந்திய விமானப்படையின் மிக் 21 விமானத்தின் விமானியை காணவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்திய விமானப்படையின் மிக் 21 விமானத்தின் விமானியை காணவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நடந்து முடிந்த தற்கொலைப் படையினர் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையில் அதீத பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இந்திய விமானப் படை நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தான் விமானப்படை இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. 

இந்நிலையில், பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுக்க, இந்திய விமானி அபிநந்தன் சென்றார். தாக்குதலுக்கு சென்ற விமானி இன்னும் திரும்பவில்லை. இதற்கிடையில், அவர் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது எனக்கூறப்படுகிறது. 

இதனிடையே, பாகிஸ்தான் இந்திய விமானப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியதோடு அல்லாமல், சர்வீஸ் எண் 27981, அபிநந்தன் என்ற விமானியும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளார் என தெரிவித்துள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்போது, மத்திய அரசின் சார்பில் விமானி ஒருவர் மாயமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவீஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் மேலும் தாக்குதலை நடத்தலாம் என நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றது. 

இந்தியா இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தும், பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பயங்கரவாதத்தை அழிக்கும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து, பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டது. மேலும், இந்திய வான்பகுதிக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானப்படையின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.

மறுபுறம் துரதிஷ்டவசமாக இந்தியா மிக் 21 விமானம் ஒன்றை இழந்துள்ளது. அந்த விமானத்திலிருந்து தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானி எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளார் என பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது. இதிலுள்ள உண்மையை ஆய்வு செய்து வருகிறோம், எனத் தெரிவித்துள்ளார். 





Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...