கோவை : இரு நாடுகளுக்கிடையே போர் மூழும் சூழலைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
கோவை : இரு நாடுகளுக்கிடையே போர் மூழும் சூழலைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதில், பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது ;- புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய விமானப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் பயங்கரவாதிகளில் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என ஆறுதல் அளித்தாலும், இரு நாடுகளுக்கிடையே போர் மூழும் அபாயம் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, இரு நாடுகளுக்கிடையேயான போராக இது மாறக்கூடாது. போர் முழு சூழலைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், கூட்டணி குறித்த கேள்விக்கு, "திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. உரிய நேரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு ஏதுமில்லை. பேச்சுவார்த்தை முடிவுக்கு பின்னர், இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன்", என பதிலளித்தார்.