திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நல்லது : கோவையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கருத்து

கோவை : கூட்டணியில் தொகுதி பங்கீடு தாமதத்திற்கு தேமுதிக வருகை கூட காரணமாக இருக்கலாம், திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நல்லது தான் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை : கூட்டணியில் தொகுதி பங்கீடு தாமதத்திற்கு தேமுதிக வருகை கூட காரணமாக இருக்கலாம், திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நல்லது தான் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, அவர் பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. எதிரும்- புதிருமாக இருந்த கட்சிகளின் கலப்பட கூட்டணி. ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய அமைச்சர்களுடன், பாமக கூட்டணி அமைத்திருப்பது என்ன நியாயம், என்றார்.

மேலும், பாமக சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் நாடகமா? எனக் கேள்வி எழுப்பியவர், பாமகவின் கோரிக்கைகள் என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கதை என விமர்சித்தார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது ;- அதிமுக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கூட்டணி. மேலும், திமுகவின் மகத்தான கூட்டணி, மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, 4 ஆண்டு காலமாக ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். 

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு எனது பாராட்டு. இத்தாக்குதல் மூலம் அரசியல் ஆதாயம் பாஜகவிற்கு வந்துவிடாது. தேச பாதுகாப்பில் பாஜகவிற்கு அக்கறை இருந்தால், இதற்கு முன்னர் நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தடுத்திருக்க வேண்டும். புல்வாமா தாக்குதல் மற்றும் வட மாநில பிரச்சினைகளை மூடி மறைக்க இத்தாக்குதலைப் பயன்படுத்த பாஜக முயல்கிறது. 

இந்தியா நன்றாக இருக்க வேண்டுமெனில், மோடி வீட்டிற்கு செல்ல வேண்டும். தேர்தல் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் பாஜக செய்யும். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தீனி போடுகிறது என்பதில் இரண்டு கருத்து இல்லை. இந்தியாவில் மத தீவிரவாதிகள் ஆட்சி செய்வதே, தீவிரவாத தாக்குதலுக்குக் காரணம். பாஜக ஆட்சியில் தேர்தல் அறிவிக்கும் நேரத்தில், தீவிரவாத தாக்குதல் நடப்பது உள்நோக்கம் கொண்டது. 

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விலகியுள்ளன. திமுக கூட்டணிக் கட்சிகள், அதிமுக உடன் சேர பேசுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை. திமுக கூட்டணியில் ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும். தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். தொகுதி பங்கீடு தாமதத்திற்கு தேமுதிகவின் வருகை கூட காரணமாக இருக்கலாம், இவ்வாறு பேசினார். 

மேலும், சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு ஏன் தனிப்படை அமைக்கவில்லை. இது அரசின் அக்கறையின்மை காட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் முறைகேடுகளில் மூழ்கியுள்ளன. ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காததே காரணம், எனவும் அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...