திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது :கோவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

கோவை : திமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கின்றது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


கோவை : திமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கின்றது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம், அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ பொது செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். 

இதில், கலந்து கொள்ள விமானம் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தடைந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது ;- ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 12 நாட்களுக்கு மேலாகி விட்டது. இந்நிலையில், முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், ஸ்டெர்லைட் நிறுவனம் அல்லது போலீசார் தான் காரணமாக இருக்க முடியும். அவர் காணாமல் போனது தொடர்பாக, முகிலன் மகன் ஹென்றி டிபேன் போன்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 

தமிழகத்தில் நடக்காத மர்மம் முகிலன் விவகாரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. மேலும், அரசின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. முகிலனுக்கு ஏதாவது நடந்து இருந்தால், அதற்கு அரசுதான் பொறுப்பு. ஒருவேளை அவ்வாறு ஏதாவது நடந்திருப்பின், அரசுக்கு இது கேடாக அமையும். 

வரும் 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார். அப்போது, கருப்பு கொடி காட்டப்படும். முல்லை பெரியாரில் புதிய அணையைக் கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்தது, நீட் விவகாரம்,10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வராதது, உயர் மின்கோபுர விவகாரம், நியூட்ரினோ திட்டம், சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றுக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும், இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், கருப்பு கொடி காட்டுவது வெற்று போராட்டம் என்ற தமிழிசையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, 'அவருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கின்றது' என வைகோ பதிலளித்தார். 

"கூட்டணி பேச்சு வார்த்தையில், திமுகவுடன் திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. திருச்சியில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இன்னும் ஆட்சிமன்ற குழு கூடவே இல்லை," என்றார் வைகோ.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...