கோவை ரோட்டரி கிளப் சார்பில் திருப்பூர் வனம் இந்தியா பவுன்டேஷனுக்கு பசுமை பாதுகாவலர் விருது

கோவை : கோவை ரோட்டரி ஹெரிடேஜ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிரீன்சிட்டி கோவை சார்பில், ரோட்டேரியன் எஸ். விஸ்வநாதன் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் திருப்பூர் வனம் இந்தியா பவுன்டேஷனுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா கோ-இந்தியா அரங்கில் நடைபெற்றது.

கோவை : கோவை ரோட்டரி ஹெரிடேஜ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிரீன்சிட்டி கோவை சார்பில், ரோட்டேரியன் எஸ். விஸ்வநாதன் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் திருப்பூர் வனம் இந்தியா பவுன்டேஷனுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா கோ-இந்தியா அரங்கில் நடைபெற்றது. 

நேற்றைய தினம், ரோட்டேரியன் எஸ். விஸ்வநாதனின் நினைவு தினம். அவர் கோவைக்கு ரோட்டரி கிளப் மூலம் பல சமூக சேவைகளை செய்துள்ளார். ஒரு சிறந்த தொழில் அதிபரான அவர், கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களிடம் கைக்கழுவும் திட்டத்தை ஊக்குவிக்க முயற்சித்தார்.

அதன் காரணமாக, சுமார் 150 பள்ளிகளில் கைக் கழுவும் வசதியை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மூலம் செய்து கொடுத்துள்ளார். மேலும், பொது மக்களிடம் மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்கப்படுத்தி, இதுவரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுவைத்துள்ளார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார். அவரின் சேவையை நினைவு கூறும் விதமாக, நேற்று சிறப்பான நிகழ்வு நடத்தப்பட்டது. 

மேலும், இந்த விழாவில் திருப்பூர் வனம் இந்தியா பவுன்டேஷனுக்கு, கோவை ரோட்டரி ஹெரிடேஜ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிரீன்சிட்டி கோவை சார்பில் பசுமை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வனம் இந்தியா பவுன்டேஷன் சார்பில் அதன் தலைவர் சுவாதி சின்னசாமி மற்றும் செயலாளர் எஸ்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்கள். 

இவ்விழாவில், ரோட்டேரியன் எஸ். ராஜசேகர், தலைமை வகித்தார். ரோட்டரி இயக்குனர் பி.பி. லட்சுமணன், முன்னிலை வகித்தார். பேசினார். சிறப்பு விருந்தினராக டாக்டர். ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக ரோட்டேரியன் வீனா பதி கலந்து கொண்டார். மேலும், அவர் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளை மேம்படுத்துவதற்கு 5 லட்சம் விதைப் பந்துகளை விநியோகித்தது குறித்து பாராட்டிப் பேசினார். 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவை ரோட்டரி ஹெரிடேஜ் கிளப் தலைவர் ரோட்டேரியன் ஜெ.குலசேகரன், செயலாளர் ரோட்டேரியன் பி. கதிர்வேலு, கிரீன் சிட்டி தலைவர் ரோட்டேரியன் வி. எஸ். சுரேஷ்குமார் மற்றும் செயலாளர் ரோட்டேரியன் கே. காந்திராஜ் ஆகியோர் செய்து இருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...