திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம், மும்மூர்த்தி நகர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் பார்த்தீபன். இவர் கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 4 வயது சிறுமியை, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி பார்த்தீபனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.