நீலகிரி : கோத்தகிரி அருகே கிளப் ரோட்டை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தின் காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள புதர்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த கோத்தகிரி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பு பகுதியில் தீ பரவுவதைத் தடுக்கும் வகையில், தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் அதிக வெயில் காரணமாக, சருகுகள் காய்ந்துள்ளதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.